Home CINEMA NEWS 42 வயதில் 12 வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் தல அஜித்தின் ஜோடி..!!! யார்...

42 வயதில் 12 வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் தல அஜித்தின் ஜோடி..!!! யார் படத்தில் தெரியுமா..!!!

thala ajith unnai thedi heroine malavika

மாளவிகா முதல் முதலாக தல அஜித்தின் உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே மாளவிகா மாளவிகா என்று பாடலும் இடம் பெற்று ஹிட் ஆனது. முதல் படமே அஜித் ஜோடி அதனை தொடர்ந்து மாளவிகா தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார்.

இவர் நடித்த வெற்றிக்கொடிகட்டு, வசூல்ராஜா எம்பிபிஎஸ், சந்திரமுகி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. திருட்டுப் பயலே என்ற படத்தில் ரூபிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா. தனது கணவனின் நண்பருடன் கள்ளத்தனமான உறவில் ஈடுபட்டு அதன்பின் திருந்தி வாழ நினைக்கும் பெண்ணாக மாளவிகா நடித்திருப்பார்.

எஸ் ஜே சூர்யாவின் வியாபாரி என்ற படத்தில் மாளவிகா ஒரு காட்சியில் வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருப்பார். முதலில் மாளவிகா அவர்களை ஹீரோயினாக பயன்படுத்திய தயாரிப்பாளர்கள் நாளடைவில் ஒரு பட பாடலுக்கு ஆட அழைக்கத் தொடங்கினார்கள் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி வந்த மாளவிகா தளபதி விஜய்யின் குருவி படத்தில் பாடலுக்கு விஜய்யுடன் ஆடி அசத்தி இருந்தார்.

விஜயுடன் நன்றாக ஆட வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அந்த நேரத்தில் கர்ப்பமாக இருந்ததால் பெரிய அளவில் ஆட முடியவில்லை என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதன்பின் சில படங்களில் நடித்த மாளவிகா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். மாளவிகா தனது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு வந்தார்.

தற்பொழுது மாளவிகா மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார் 12 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு மாளவிகா கோல்மால் என்ற படத்தில் நடிக்கிறார் இந்த படத்தை பொன்குமரன் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா தன்யா, யோகி பாபு போன்றவர்கள் நடிக்கிறார்களாம்.

இந்தப் படத்தில் ஜீவாவுக்கு பாஸாக நடிக்கிறாராம் மாளவிகா.

Exit mobile version