Home NEWS தாலிபான் பிடியில் ஆப்கான் பெண்கள்…!!!! பெண்களுக்கு தாலிபானின் கடுமையான கட்டுப்பாடுகள் என்னன்னனு தெரியுமா.

தாலிபான் பிடியில் ஆப்கான் பெண்கள்…!!!! பெண்களுக்கு தாலிபானின் கடுமையான கட்டுப்பாடுகள் என்னன்னனு தெரியுமா.

taliban

வாலிபன் தலைவர்களில் ஒருவரான வஹிதுள்ளா ஹஷிமி கூறுகையில் ஆப்கானில் ஷரியத் சட்டத்தின்படி தான் ஆட்சி நடக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இஸ்லாமிய நாடுகளில் இந்த சட்டங்கள் அமலில் உள்ளன. திருட்டு, பொய் சாட்சி என ஒவ்வொரு குற்றத்துக்கும் சரி ஷரியத் நீதிமன்றங்களில் இந்த சட்டம் விதிகளின்படி தண்டனைகளை வழங்கப்படும். சமூகத்தில் இருந்து விலக்கி வைப்பது கசையடி போன்றவை உண்டு.

இது தவிர கிசாஸ் எனப்படும் தண்டனையும் வழங்கப்படுகிறது. இதில் எதிராளியின் காதை ஒருவர் அறுத்துவிட்டால், இவருக்கும் அதே காது அழிக்கப்பட்டுவிடும். திருமணத்துக்கு முன்பு விபச்சாரத்தில் ஈடுபட்டால் ஆண் பெண் யாராக இருந்தாலும் 100 கசையடியும் திருமணத்திற்குப் பிறகு விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இதெல்லாம் இஸ்லாமியர்களாக வாழ்பவர்களுக்கு தானே தவிர மற்ற மதத்தவர்களுக்கு பொருந்தாது. உட்பட இஸ்லாமிய நாடுகளில் பொதுவாக அந்த சட்டங்கள் இருந்தாலும் அந்த நாடுகளில் பெண்களுக்கு அச்சமற்ற நிலையில் காணப்படுகிறது. ஆனால் ஆப்கானில் நிலைமை அப்படியல்ல தாலிபான்கள் ஷரியத் சட்டத்தை தவறாக பயன்படுத்தி கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் ஆப்கானில் முந்தைய தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

பெண்கள் மிக மெதுவாக பேச வேண்டும்.

அவர்கள் பேசுவது வெளி ஆண்களுக்கு கேட்கக் கூடாது.

நடக்கும் போது சத்தம் வரக் கூடாது. அதனால் ஹை ஹீல்ஸ், ஷூ அணிய தடை.

வீட்டுக்குள் தான் பெண்கள் முடங்கிக் கிடக்க வேண்டும். பால்கனிக்கு கூட வரக்கூடாது.

நாளிதழ், புத்தகங்கள், விளம்பரங்களில் பெண்களின் புகைப்படங்கள் வரக்கூடாது.

விதிகளை மீறினால் பொதுஇடங்களில் கசையடி மரண தண்டனை வழங்கப்படும்.

கல்வி கற்க தடை, வேலைக்கு செல்ல தடை.

பெண்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது.

மேக்கப் செய்த கொல்லக்கூடாது. நெயில் பாலிஷ் கூட போட கூடாது.

புர்க்கா அணியாமல் பெண்கள் வெளியில் வரக்கூடாது.

வீட்டின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இருப்பவர்கள் வீட்டுக்குள் பெண்கள் இருப்பது தெரியாத அளவுக்கு ஜன்னல்களில் ஸ்க்ரீன் போட்டு மூட வேண்டும்.

இவையெல்லாம் பெண்கள் மீதான தாலிபான்களின் அடக்கு முறைகளில் சில இந்த கொடூர முகம் மீண்டும் வெளிப்படும். அச்சத்தில் தான் பெண்கள் குழந்தைகள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

Exit mobile version