Home CINEMA NEWS நைட் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்த சாக்ஷி அகர்வால்..!!! வெளியான புகைப்படங்கள்.

நைட் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்த சாக்ஷி அகர்வால்..!!! வெளியான புகைப்படங்கள்.

sakshi the night

சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் தற்பொழுது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்தப் படத்தில் யாரும் அவரை எளிதாக அடையாளம் காண முடியாது. அதன்பின் திருட்டு விசிடி, கககபோ போன்ற படத்தில் நடித்து வந்தார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வெளியான காலா என்ற படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தல அஜித்தின் விஸ்வாசம் என்ற படத்தில் நயன்தாராவுடன் பணிபுரிபவராக நடித்திருந்தார்.

இதனிடையே விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்த இவருக்கு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்துள்ளது.

அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள் என்றாலும் இதுவரை சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு தற்பொழுது ஹீரோயின் ரோல் கிடைக்கிறது என்பது பெரிய ஆறுதல். தற்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

அடிக்கடி ஏதாவது ஏடாகூடமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த சாக்ஷி தி நைட் என்ற படத்தில் குட்டை உடையணிந்து சற்று நெருக்கமாக ஹீரோவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Exit mobile version