Home CINEMA NEWS பிரபல நடிகை ரீமாசென்னின் கணவர் இவரா…!!! இணையத்தில் வைரல் ஆகும் திருமண புகைப்படங்கள்.

பிரபல நடிகை ரீமாசென்னின் கணவர் இவரா…!!! இணையத்தில் வைரல் ஆகும் திருமண புகைப்படங்கள்.

reemasen wedding photos 24x7tamil

நடிகை ரீமாசென் ஒரு நேரத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழில் இவர் முதல் முதல் அறிமுகமாகிய மின்னலே படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தில் வரும் வசீகரா என்ற பாடல் இன்றுவரை பல இளசுகளின் ஃபேவரிட் என்றே சொல்லலாம்.அதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் பகவதி என்ற படத்தில் நடித்தார். தன் முதல் பட நடிகரான மாதவனின் ஜேஜே படத்தில் மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடல் மாபெரும் ஹிட்டானது.

இளசுகளின் கனவு கன்னியாக வந்த ரீமாசென் சிம்புவின் வல்லவன் படத்தில் வில்லியாகவும் நடித்திருந்தார். அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் ஒரு அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களில் நடித்த ரீமாசென் 2012ம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது நடிகை ரீமா சென்னுக்கு ருத்ர வீர் என்ற அழகிய பையனும் உள்ளார். சமீபத்தில் இணையத்தில் ரீமா சென்னின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள். 

Exit mobile version