Home CINEMA NEWS என் சைசிற்கும் உடல் வாகிற்கும் அது சரிப்பட்டு வராது கூறும் பிரியா பவானி ஷங்கர்..!

என் சைசிற்கும் உடல் வாகிற்கும் அது சரிப்பட்டு வராது கூறும் பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிபெற்றவர்களில் நடிகை பிரியபவானி ஷங்கரும் ஒருவர். இவர் முதலில் செய்திவாசிப்பாளராக பணிபுரிந்து அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் இவர் நடித்தார்.

இந்த சீரியல் மூலம் இவருக்கு நடிகர் வைபவ் நடித்த மேயாதமான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கடைக்குட்டி சிங்கம், மாபியா போன்ற படங்களில் இவர் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் கைவசம் இந்தியன் 2 , குறத்தி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, பொம்மை, வான் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவர் தேர்தெடுக்கும் கதாபாத்திரங்கள் பொதுவாக ஹோம்லியாக இருக்கும்.

இதுபற்றி பேட்டி ஒன்றில் பிரியா பவானி ஷங்கரிடம் கேட்ட போது, என் முகத்திற்கும், உடல் அமைப்பிற்கும் கவர்ச்சி சரிப்பட்டு வராது, இதனால் சில பட வாய்ப்புகளை நான் இழந்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

Exit mobile version