Home CINEMA NEWS 11 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை மீனா….?இணையத்தில் பரவி வரும் வீடியோ..!!!

11 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை மீனா….?இணையத்தில் பரவி வரும் வீடியோ..!!!

meena pregnant

நடிகை மீனா முதன்முதலாக சிவாஜி கணேசன் அவர்களின் நெஞ்சங்கள் என்ற படத்தில் அறிமுகமானார். சினிமாவில் அதிகம் நாட்டம் கொண்ட மீனா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

Meena Wedding Pictures

90ஸ் நடிகைகளில் கொடிகட்டி பறந்த நடிகைகள் பட்டியலில் மீனாவிற்கு பெரிய இடம் உண்டு. பார்க்க ஹோம்லியாக இருந்த மீனாவிற்கு ரஜினி கமல் அஜித் பிரபு போன்ற உச்சத் நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜயுடன் நடிக்க முடியவில்லையே என்று வருத்தத்தில் இருந்த மீனாவிற்கு ஷாஜகான் படத்தில் விஜயுடன் ஒரு பட பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலில் விஜய்யுடன் மீனா போட்ட குத்தாட்டம் மாபெரும் ஹிட் பாடலாக அமைந்தது. இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் மீனா அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள்… ரஜினி அங்கிள்… என்று அழைக்கும் சிறுபிள்ளையாக நடித்து அதன் பின் ரஜினிக்கு ஜோடியாக வீரா, முத்து போன்ற படங்களில் நடித்து இருந்தார். சமீபத்தில் மீண்டும் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார்.

தன்னைப்போல தன் மகளையும் நடிகையாக்கி அழகு பார்க்க நினைத்த மீனா முதல் முதலாக தன் மகள் நைனிகாவை தளபதி விஜயின் தெறி திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க வைத்திருந்தார். அம்மா போலவே க்யூட்டாக இருந்த நைனிகாவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். சுட்டி தனமாக நைனிகா விஜயிடம் பேசும் வசனங்கள் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது.

தற்பொழுது நைனிகா வயது 12. இந்நிலையில் சமீபத்தில் மீனா கர்ப்பமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது அதனை பார்த்த ரசிகர்கள் மீனா கர்ப்பமாக இருக்கிறார் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். 11வருடங்களுக்கு பிறகு மீனா இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க போகிறார் என்று செய்திகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருந்தது.

மீனா கர்ப்பமாக இருப்பது போல வெளியான வீடியோ மீனாவே பதிவிட்டது தான் ஆனால் அது ஒரு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கர்ப்பமாக இருக்கும் கெட்டப்பில் ஜாலிக்காக வெளியிட்டு இருந்தாராம். அவர் ஜாலிக்காக வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் குழம்பிப் போய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பெரும் கூத்தாக சமூக வலைத்தளத்தில் அமைந்தது.

Exit mobile version