Home CINEMA NEWS தல அஜித் போல சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் பிரபல நடிகை ஜெனிலியாவின் கணவர்..!!! கொஞ்சம்...

தல அஜித் போல சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் பிரபல நடிகை ஜெனிலியாவின் கணவர்..!!! கொஞ்சம் கூட அழகு குறையாத ஜெனி..!!!

Genelia with husband

ஜெனிலியா நல்ல வசதியான வீட்டுப் பெண் . ஜெனிலியாவின் அப்பா டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் முக்கியமான மூத்த பொறுப்பில் இருந்தவர். ஜெனிலியாவின் சகோதரர் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பணிபுரிந்து வருகிறார்.

ஜெனிலியாவை தமிழுக்கு அறிமுகப்படுத்தியது இயக்குனர் ஷங்கர் தான் ஜெனிலியாவின் பார்க்கர் பெண் என்ற ஹிந்தி படத்தை பார்த்துவிட்டு சங்கர் தான் இயக்கும் பாய்ஸ் என்ற படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்க வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த ஜெனிலியா. சச்சின் என்ற படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப்படம் ஜெனிலியாவுக்கு பிரபலத்தை தேடித்தந்தது.

Genelia in sachien

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் வெளிப்படுத்திய சுட்டித்தனமான நடிப்பு மக்களை பெரிதாக கவர்ந்தது.

ஜெனிலியா தன்னுடன் ஹிந்தி படத்தில் ஜோடியாக நடித்த ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது ஜெனிலியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

Genelia with husband

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெனிலியாவும் அவரது கணவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் தல அஜித் போல அவரது கணவர் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்க கூடவே ஜெனிலியா நிற்கிறார்.

Exit mobile version