Home NEWS பிரச்சார வேனை தானே ஒட்டிக்கொண்டு வந்து வாக்கு சேகரிக்கும் நடிகை கவுதமி..!!!

பிரச்சார வேனை தானே ஒட்டிக்கொண்டு வந்து வாக்கு சேகரிக்கும் நடிகை கவுதமி..!!!

gautami drive tempo traveller in bjp election campiagn

நடிகை கௌதமி தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கொடி கட்டி பறந்த நடிகை. தமிழில் முன்னணி ஹீரோக்களின் விருப்பமான நாயகி என்றால் கௌதமியும் ஒருவர். கௌதமிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் ஒரு காலத்தில் இருந்தனர்.

கமலஹாசனின் தசாவதாரம் படத்திற்கு உடை வடிவமைப்பாளர் கௌதமி தான். சிறந்த உடை வடிவமைப்பாளர் என்ற விருதை பெற்றார் கௌதமி. கமலுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த கௌதமி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் என்ற படத்தின் ரீமேக்கான பாபநாசம் என்ற படத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கமலஹாசனுடன் ஒன்றாக இருந்து வந்த கௌதமி ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கமலை விட்டு விலகி தனியாக வாழ்ந்து வருகிறார். தற்பொழுது கௌதமி பாரதிய ஜனதா கட்சியில் கட்சியில் சமீபத்தில் தான் இணைந்தார்.

கமல் ஒரு பக்கம் பாஜகவை எதிர்த்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மற்றொரு பக்கம் பாஜகவிற்கு ஆதரவாக கவுதமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கௌதமிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர் மக்கள் ஒரு சிலர்.

தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு மக்களிடம் பேசி வந்த கௌதமி தேர்தல் பிரச்சார வேனை தானாகவே ஓட்டிக்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

பாஜக மாநில தலைவர் எல்.முருகனை ஆதரித்து தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கவுதமி பிரச்சார வேனை பத்து கிலோமீட்டர் தூரம் ஓட்டி வந்து மக்களிடம் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதையும் படிங்க : நடிகை ப்ரியாமணியிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர்..!!! சரியான பதிலடி கொடுத்த ப்ரியாமணி…!!!

பிரச்சார வண்டியை தானே ஓட்டி வந்து மக்களிடம் வாக்கு சேகரிக்கும் கௌதமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து கவுதமி கூறியது எனது முதல் காரை மீண்டும் ஓட்டுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் !! நான் ஒரு டெம்போ டிராவலரில் ஓட்ட கற்றுக்கொண்டேன், பிரச்சாரப் பாதையில் இருப்பது மிகவும் நல்லது, இது எனது போனஸ் !! என்று கூறியுள்ளார்.

Exit mobile version