Home CINEMA NEWS பிக்பாஸ் தாடிபாலாஜி செல்ல மகள் போஷிகா தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..!! இவ்வளவு பெரிதாக...

பிக்பாஸ் தாடிபாலாஜி செல்ல மகள் போஷிகா தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..!! இவ்வளவு பெரிதாக வளர்ந்துட்டாரா..?

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டவர் தாடி பாலாஜி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு பல வருடங்களாக சினிமாவில் துணை நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் பங்கேற்று வந்தார். அந்த சமயத்தில்தான் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய காரணம் பிரிந்திருக்கும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்காக.ஏனெனில் அவர் மனைவி நித்தியாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டதால் இவர் இருவரும் சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இவர்களுக்கு போஷிகா என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இருவரும் மகள் மூலமாக சேர்ந்தார்கள் ஆனால் சில மாதங்களிலேயே இருவரும் மீண்டும் சண்டையிட்டு பிரிந்து விட்டனர்.

தாடி பாலாஜிக்கு தன் மகள் போஷிகா மீது அதிக பாசம், அதனை இந்த சீசனில் நாம் அனைவரும் பார்த்து இருக்கலாம். இந்நிலையில் மகள் போஷிகா தன் அம்மாவுடன் தான் வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அடிக்கடி தன் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக நித்யா தனது மகள் போஷிகா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதில் பிக்பாஸில் வந்து சுட்டிப்பெண் போஷிகாவா இது என்பதுபோல ஆள் அடையாளமே தெரியாமல் மாறி உள்ளார் போஷிகா. இந்தப் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் போஷிகா வளர்ந்து விட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version