Home CINEMA NEWS பிரபல நடிகர் நகுலின் மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய தொந்தரவு செய்த மர்ம நபர்…!!!

பிரபல நடிகர் நகுலின் மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய தொந்தரவு செய்த மர்ம நபர்…!!!

actor nakul wife gave complaint to police

நகுல் பிரபல நடிகை தேவயானி அவர்களின் அன்புத் தம்பி. முதலில் தமிழ் சினிமாவிற்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் நகுல்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் அந்த நேரத்தில் பட்டி தொட்டி எங்கும் பெரிய ஹிட் பாடலாக ஒலித்தது. அந்தப் பாடலே அந்த படத்திற்கு பெரிய விளம்பரத்தை தேடிக் கொடுத்தது. நகுல் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதனைத் தொடர்ந்து மீண்டும் சுனேனா உடன் மாசிலாமணி என்ற படத்தில் நடித்திருந்தார்.

எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்த நகுலுக்கு தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

நகுல் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் வாட்டர் பாத் மூலம் குழந்தை பெற்றார்கள். தனது அன்பு குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் நகுலின் மனைவி திடீரென்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மர்ம நபர்கள் சிலர் ஆபாசமாக வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்வதாக புகார் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார் கடுமையான விதிகளைக் கொண்டு வரும் வரை இது போன்ற விஷயங்களில் மாற்றம் வராது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version