Home CINEMA NEWS விஜய் வழியை பின்பற்றிய ஹரிஷ் கல்யாண்..! குவியும் பாராட்டுக்கள்..!

விஜய் வழியை பின்பற்றிய ஹரிஷ் கல்யாண்..! குவியும் பாராட்டுக்கள்..!

கொரானோ இல்லாத நாள் எப்போது வரும் என்று தற்போது உலகமே காத்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் கொரானோ பரவும் தாக்கமோ நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரனோ தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே வருகிறது. இதுவரை இந்தியாவில் 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1800 கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஆரம்பித்த கொரானோ தற்போது உலகெங்கும் உள்ள நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் சினிமா துறையிலும் இந்த ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு, சீரியல் பட பிடிப்பு, தியேட்டர்கள் மூடல் என சினிமா நிலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தன் சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொண்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1 பங்கேற்று தற்போது பல படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாணும் தன் சம்பளத்தை குறைத்துள்ளார், இந்த முடிவை இவர் ரசிகர்களும், திரைத்துறை வட்டாரத்தினரும் வரவேற்கின்றனர்.

Exit mobile version