Home CINEMA NEWS சொந்த செலவில் பிரமாண்ட ஆஞ்சநேயர் கோயில் கட்டிய ஆக்சன் கிங் அர்ஜுன்..!!! புகைப்படங்கள் இதோ.

சொந்த செலவில் பிரமாண்ட ஆஞ்சநேயர் கோயில் கட்டிய ஆக்சன் கிங் அர்ஜுன்..!!! புகைப்படங்கள் இதோ.

arjun hanuman temple inaguration

ஆக்சன் கிங் அர்ஜுன் நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வைத்த பெயர்தான் ஆக்சன் கிங்.

இவருடைய படங்களில் உள்ள சண்டைக் காட்சிகளில் ரசிக்கும்படி இருக்கும் அது போல அர்ஜூனும் ரிஸ்க் எடுத்து நிறைய சண்டை காட்சியில் நடித்துள்ளார். முன்பெல்லாம் அர்ஜுன் படம் என்றால் ஆக்சன் ப்ளாக் வைத்துவிடுவார்கள் இயக்குனர்கள். அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த அவருக்கு சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படம் மாபெரும் வெற்றி பெற்று அர்ஜூனின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது.

அந்தப் படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜுன் நடித்து அசத்தி இருப்பார். அதனைத் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடித்து வந்த அர்ஜுன் மங்காத்தா என்ற படத்தில் தல அஜித்துடன் நடித்திருந்தார் அது போல சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார்.

அர்ஜுன் தற்பொழுது நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அர்ஜுன் அவர்கள் தீவிர ஹனுமன் பக்தர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

அர்ஜுன் கெருகம்பாக்கத்தில் பிரம்மாண்டமாக ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டி வந்தால் அதன் கும்பாபிஷேகம் நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது கொரோனா காலகட்டம் என்பதினால் மக்கள் யூடுயூப் லைவ் செய்திருந்தார்.

சொந்த செலவில் கெருகம்பாக்கத்தில் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் அர்ஜுனின் கனவு நிறைவேறியது.

Exit mobile version