Home NEWS தகாத உறவில் ஈடுபட்டதை பார்த்த 19 வயது கன்னியாஸ்திரி கொலை..!!! 28 ஆண்டுக்கு பிறகு...

தகாத உறவில் ஈடுபட்டதை பார்த்த 19 வயது கன்னியாஸ்திரி கொலை..!!! 28 ஆண்டுக்கு பிறகு பாதிரியார் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.

abhaya case verdict kerala 24x7tamil

கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளை யார் என்று தீர்ப்பளித்துள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

கேரளாவிலுள்ள கோட்டயத்தில் கன்னியாஸ்திரி அபயா PMC கல்லூரியில் படித்து வந்தார் அவர் படிக்கும் பொழுது செயின் பயஸ் கான்வென்ட்டில் தங்கி படித்து வந்தார். கிட்டத்தட்ட 28 ஆண்டுக்கு முன் அதாவது 1992ஆம் ஆண்டு அந்த கான்வென்ட் வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்தப் பெண் அபயா என்று கண்டுபிடித்த பின் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அபயா எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று சந்தேகத்தின் பேரில் மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் சிபிஐ விசாரணைவேண்டும் என்று கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கொலை செய்யப்பட்ட 19 வயது கன்னியாஸ்திரி அபயா

அந்த வழக்கை விசாரிக்க சென்னை சிபிஐ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவரைக் கொலை தான் செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் யார் இந்தக் கொலையைச் செய்தார் என்பதை சிபிஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் மேலும் ஒரு சிபிஐ குழுவிற்கு இந்த வழக்கு விசாரணைக்கு கொடுத்துள்ளார்கள். அப்பொழுது அபயாவை பாதிரியார்கள் தாமஸ், ஜோஸ் புத்ருகையில் மட்டும் கன்னியாஸ்திரி செபி மூவரும் இணைந்து கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கன்னியாஸ்திரி செபி

அபயாவை கிணற்றில் தள்ளி கொன்றார்கள் என்ற விசாரணையில் பாதிரியாருக்கும் கன்னியாஸ்திரி செபிக்கும் தகாத உறவு இருந்ததாகவும் அதை ஒரு முறை கன்னியாஸ்திரி அபயா நேரில் பார்த்து விட்டாராம். தகாத உறவை பற்றி வெளியில் கூறி விடுவாரோ என்ற அச்சத்தில் அபயாவை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட மூவரும் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

கன்னியாஸ்திரி செபி மற்றும் பாதிரியார் தாமஸ்

தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை இந்த வழக்கில் இருந்து எங்களை விடுங்கள் என்று கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார்கள். கொலைக்கான போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் இருந்தாலும் இருவரும் மீது வழக்கு நடைபெற்று வந்தது.

அபயாவின் ஆசிரியையான தெரசம்மா என்பவர் பல மிரட்டலை தாண்டி சிபிஐ நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். தெரசம்மா அளித்த சாட்சியில் தொடர்ந்து 2 பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகள் இடத்தில் சில்மிஷம் செய்து வருவதாகவும், இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து கன்னியாஸ்திரீகள் வசிக்கும் இடத்திற்கு சென்றதாகவும் சாட்சி அளித்தார்.

ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் தலைவராக இருந்த லலிதாம்பா என்பவரும் சாட்சி அளித்தார். 2008ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி கன்னித்தன்மை பரிசோதனைக்காக செபியை அழைத்து வந்தனர் போலீசார். அப்போது செபி கன்னித்தன்மையுடன் இருப்பது போல காட்டிக் கொள்வதற்காக சிகிச்சை செய்து இருந்ததும் கண்டுபிடித்தேன் என்று கூறினார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாதிரியார் தாமஸ் கன்னியாஸ்திரி செபி குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார். இவர்களுக்கு என்ன தண்டனை என்று விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று கூறி உள்ளார்கள். இந்தத் தீர்ப்பை சற்றும் எதிர்பாராத பாதிரியாரும் கன்னியாஸ்திரி செபியும் நீதிமன்றத்தில் கதறி அழுதனர் அதன்பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தகாத உறவில் ஈடுபட்டதை வெளியில் சொல்லிவிடுவார் என்று பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி சேர்ந்து 19 வயது இளம்பெண் ஒருவரை கிணற்றில் தள்ளி கொலை செய்திருப்பது கேரள மக்கள் மட்டும் அல்லாமல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Exit mobile version