Home NEWS கணவனால் கைவிடப்பட்டு கைகுழந்தையுடன் வறுமையை வென்று சப் இன்ஸ்பெக்டர் ஆன இளம்பெண்…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

கணவனால் கைவிடப்பட்டு கைகுழந்தையுடன் வறுமையை வென்று சப் இன்ஸ்பெக்டர் ஆன இளம்பெண்…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

Sub inspector

திருவனந்தபுரத்தில் கைக்குழந்தையுடன் கணவரால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண் சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். நடிகர் மோகன்லால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் அருகே காஞ்சிரம்குளம் பகுதியை சேர்ந்தவர் அனிசிவா பள்ளிப்படிப்பை முடித்தவர். அங்கு உள்ள கல்லூரியில் இளங்கலை சோசியாலஜி படித்தார். முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு காதல் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2009இல் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் கணவர் பிரிந்து சென்று விட்டார்.

கணவன் கைவிடப்பட்டதால் அனிசிவா கைக்குழந்தையுடன் தவித்தார். தொடர்ந்து குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பெற்றோர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அருகில் ஒரு ஓலை குடிசையில் வசிக்கும் பாட்டியுடன் தஞ்சமடைந்தார். குடிசையில் கைக்குழந்தையுடன் வாழ்க்கையை தொடங்கினார். வறுமை என்றாலும் தொடர்ந்து படித்தார். வறுமையை குறைப்பதற்காகவும் படிப்பு செலவிற்காக விழாக்களில் ஐஸ்கிரீம் விற்பது, இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணிபுரிந்து அந்த பகுதியை சேர்ந்த அவர்களுக்கு வீடு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற வேலைகள் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தார். அவருக்கு தோழி ஒருவர் ஆதரவாக இருந்தார். எப்படியாவது அரசு வேலையை பெற்றுவிட வேண்டும் என்று தோழி ஊக்கம் கொடுத்தார். இதனால் போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்த தொடங்கினார். 2016 சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்ற அணி சிவாவுக்கு கொச்சியில் நடக்கும் பயிற்சி சேர அழைப்பு வந்தது. இதனால் தனது மகனை அழைத்துக் கொண்டு கொச்சி சென்றார். மகனை அங்குள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு பயிற்சிக்கு சென்று வந்தார். சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடிந்து அவருக்கு தனது சொந்த ஊரான வர்க்கலா காவல் நிலையத்தில் பணி நியமனம் கிடைத்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

இதற்கிடையே தன்னுடைய மகன் கொச்சியில் படித்து வந்ததால் இட மாறுதல் கேட்டு டிஜிபி லோக்நாத் பெஹ்ராவிடம் கோரிக்கை விடுத்தார் அவரது கோரிக்கையை ஏற்று எர்ணாகுளத்துக்கு இடமாறுதல் வழங்கி டிஜிபி உத்தரவிட்டார். அதன்படி இன்று எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். இதுகுறித்து விவரங்களை அறிந்த நடிகர் மோகன்லால் தனது பேஸ்புக்கில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Exit mobile version