Home NEWS நண்பன் பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்க்க உதவிய மருத்துவர்…!!! காஷ்மீரில் நெகிழ்ச்சியான...

நண்பன் பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்க்க உதவிய மருத்துவர்…!!! காஷ்மீரில் நெகிழ்ச்சியான சம்பவம்.

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மேலும் பல்வேறு உடல் நிலை பிரச்சனைகள் இருந்ததால் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே கிரால் போராவில் உள்ள மாவட்ட துணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பனிப் பொலிவு காரணமாக சாலை வழியாகவோ, ஹெலிகாப்டர் மூலமும் அங்கு செல்ல முடியாத நிலை.

இதனால் செய்வதறியாது திகைத்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் இது குறித்து கிரால்போரா ஆஸ்பத்திரி மகப்பேறு டாக்டர் பார்வைக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் whatsapp வீடியோ கால் மூலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அர்சாத் சோபிக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதன் மூலம் டாக்டர் அர்சாத் சோபியும் செயல்பட கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். வீடியோ கால் மூலம் சுகப்பிரசவத்திற்கு வழி செய்த டாக்டர் அர்சாத் சோபி செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version