Home NEWS ஆங்கிலத்தில் 35, கணக்கில் 36 மதிப்பெண்கள் மட்டுமே 10-ம் வகுப்பில் எடுத்து கலெக்டர் ஆன சுவாரசியமான...

ஆங்கிலத்தில் 35, கணக்கில் 36 மதிப்பெண்கள் மட்டுமே 10-ம் வகுப்பில் எடுத்து கலெக்டர் ஆன சுவாரசியமான கதை…!!!

collector

குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேராவின் சாதனையை காண்போம். இவர் பொருத்தவரை மதிப்பெண்கள் தங்களது வாழ்க்கையை தீர்மானிக்கப் போவதில்லை. சமீபத்தில் இவரது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதில் மாவட்ட ஆட்சியரின் மதிப்பெண்ணா என்று அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

10 ஆம் வகுப்பில் அவர் எடுத்த மதிப்பெண்கள் ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மதிப்பெண்கள் மட்டுமே.இவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை இப்போது காணலாம். குஜராத்தில் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள சோட்டிலா கிராமத்தை சேர்ந்தவர் துஷார். தல்பத்பாய் – கௌரிபென் இவர்களின் மூத்த மகன் ஆவர். இவரது தாயார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். ஆசிரியரின் மகனாக இருந்தபோதும் துஷார் ஒரு சராசரி மாணவனாகவே இருந்துள்ளார்.

இவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது கூட நல்ல மதிப்பெண் எடுக்கவில்லை. பலரது ஆலோசனைகளின் படி ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படிக்க கல்லூரியில் சேர்ந்தார். அவர் கல்லூரியில் ஆங்கிலத்தை முதன்மைப் படமாக எடுத்துப் படிக்க விரும்பினார். அப்போது ஆங்கிலத்தில் தனது பெயரை எழுதும்போது முதல் எழுத்து (கேப்பிட்டல் லெட்டர்) எழுத வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியாதாம். இவ்வாறு இருந்த போதிலும் தனது நம்பிக்கையை இழக்கவில்லை படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

அவர் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள தினமும் தவறாமல் ஆங்கில நாளிதழை வாசிக்க வேண்டும் என பேராசிரியர் குப்தா அவருக்கு அறிவுறுத்தினார். மேலும் தினசரி கல்லூரியில் சுமார் மூன்று மணி நேரம் ஆங்கில நாளிதழை வாசித்துள்ளார். அப்போது வார்த்தைகளின் வாக்கிய அமைப்பு பற்றி கூர்மையாக கவனித்துள்ளார்.

இந்த நாளிதழ் மூலம் உலக பொருளாதாரம், நாட்டுநடப்பு போன்ற பல்வேறு செய்திகளை தெரிந்துகொள்ள உதவியது. அதோடு இளங்கலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். பின்பு முதுகலை கல்வியியல் (எம்ஏ பிஎட்) படித்து முடித்தவுடன் மாதம் 2500 ரூபாய் சம்பளத்திற்கு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்துள்ளது. அரசு வேலை கிடைத்தாலும் அதில் திருப்தி அடையாமல் வேற வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பியுள்ளார்.

பிறகு சுரேந்தர்நகர் மாவட்டத்திலுள்ள மாவட்ட வளர்ச்சி அதிகாரியான வினோத் ராவ் நியமிக்கப்பட்டார். அவரிடம் தான் ஐஏஎஸ் படிக்க ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார். அதற்கு அவர் “நீ நிச்சயம் ஐஏஎஸ் ஆகலாம் அடுத்த முறை என்னை சந்திக்கும் போது உனது தந்தையை அழைத்து வா” என கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து ஐஏஎஸ் படிக்க விரும்பும் இளைஞர்களுக்கு உதவி வரும் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்ராபாலி மர்ச்சண்ட் குறித்து அவருக்கு தெரியவந்துள்ளது.

அவரின் தந்தையும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இந்நிலையில் முக்கியமான முடிவு ஒன்று எடுக்க வேண்டி உள்ளது. அரசு பணியை விட்டுவிட்டு படிக்கச் செல்ல வேண்டும். இந்நிலையில் பள்ளி வேலையை விட்டுவிட்டு யூபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க தயாரானார். சுமார் 5 ஆண்டுகளுக்கு எந்தவித பண்டிகைகள், கொண்டாட்டங்களிலும் ஈடுபடவில்லை, விடுப்பு எடுக்கவில்லை. என் மதிப்பெண் சான்றிதழ் என் அறிவை அளவிடும் கருவி அல்ல என்று உறுதியாக நம்பினேன்.

தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும், குடும்பத்தாரின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் என்னால் தேர்வுக்கு கடுமையாக தயாராகி தேர்வில் வெற்றி பெற்றேன். பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் தனது வளமான அறிவாற்றலும், நம்பிக்கையுடன் கூடிய தகவல் தொடர்பு திறனும் இருக்குமே ஆனால் அனைவரும் சாதிக்கலாம் என கூறியுள்ளார். மேலும் மதிப்பெண் சான்றிதழ் ஒரு பொருட்டல்ல உறுதியோடும், நம்பிக்கை, கடின உழைப்பு இருந்தால் தங்களை சாதனையை நோக்கி அழைத்துச் செல்லும் என இவரது கதையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

Exit mobile version