Home CINEMA NEWS 7G ரெயின்போ காலனி அனிதா போல போஸ் கொடுத்த சோனியா அகர்வால்…!!! ஹீரோயினாக நடித்த...

7G ரெயின்போ காலனி அனிதா போல போஸ் கொடுத்த சோனியா அகர்வால்…!!! ஹீரோயினாக நடித்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா..!!!

sonia agarwal 7g rainbow colony pose

சோனியா அகர்வால் சினிமாவிற்கு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து சிம்புவுடன் கோவில் விஜயுடன் மதுர படத்தில் நடித்திருந்தார் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் 7G ரெயின்போ காலனி என்ற படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். குறிப்பாக 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் கண் கலங்கிய இளைஞர்கள் பலர் அந்த அளவிற்கு மனதுக்கு பாரமான ஒரு கிளைமஸ் காட்சியாக இருந்தது.

Dhanush Soniya Agarwal in Selvaraghavan Pudhupettai

இதற்கிடையில் தனுஷின் அண்ணனும் இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால் தனது கணவர் செல்வராகவனின் தம்பி தனுஷுடன் புதுப்பேட்டை படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நெருக்கமாக நடித்து இருந்தார்.

ஒரு சில பிரச்சனைகளால் இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சோனியா அகர்வாலின் குடி தான் விவாகரத்துக்கு காரணம் என்று பல மீடியாக்களில் அந்த நேரத்தில் தகவல்கள் வெளிவந்தது.

ஒரு நேரத்தில் ஹீரோயினாக நடித்து வந்த சோனியா அகர்வால் தற்போது சின்னச் சின்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க ரெடி என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறாராம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சோனியா அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் பிங்க் நிற உடையணிந்து இருக்கிறார். 7G ரெயின்போ காலனி படத்தில் எப்படி போஸ் கொடுத்தாரோ அதே போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரு நேரத்தில் அடுக்கடுக்காக படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகையின் நிலைமை இப்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

Exit mobile version