Home NEWS வேகாத வெயிலில் உடைந்த நாற்காலியை பயன்படுத்தி ஓய்வூதியம் பெற 7 கி.மீ தூரம் நடந்தே சென்ற...

வேகாத வெயிலில் உடைந்த நாற்காலியை பயன்படுத்தி ஓய்வூதியம் பெற 7 கி.மீ தூரம் நடந்தே சென்ற 70 வயது மூதாட்டி…!!!

ஓய்வூதியம் பெறுவதற்காக வங்கியை நோக்கி நடையாய் நடந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட அவலம் குறித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் நப்ராங்பூர் மாவட்டம் ஜாதிக்கான் பகுதியில் 70 வயது மூதாட்டி சூரிய ஹரிஜான் என்பவர் வசித்து வருகிறார்.

ஒவ்வொரு மாதமும் மாநில அரசின் மாதாந்திர ஓய்வூதிய பணத்தை பெற்று வந்த இவரின் கைரேகை பதிவுகள் மறைந்ததால் தேசியம் ஆக்கப்பட்ட வங்கி நிர்வாகம் அவரது ஓய்வூதிய தொகையை நிறுத்தியது.

அதனால் வங்கி நிர்வாகத்தை அனுப்புவதற்காக கோடை வெயிலில் கால்நடையாக வெறும் காலுடன் நடந்து சென்றார். மேலும் அவர் உடைந்த நாற்காலியை பயன்படுத்தி சாலையோரமாக ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த சம்பவத்திற்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மூதாட்டியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தரும் படி வங்கியின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

Exit mobile version