Home NEWS எடப்பாடி 18 பேரை நீக்கியதுக்கு எடப்பாடி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்கிய ஓ...

எடப்பாடி 18 பேரை நீக்கியதுக்கு எடப்பாடி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்கிய ஓ பன்னீர் செல்வம்..!!! இப்படி மாற்றி மாற்றி கட்சியில் இருந்து நீக்கி விளையாடலாமா தொண்டர்கள் வருத்தம்.

22 minister rejected by o paneerselvam

கடந்த சில மாதங்களாகவே அதிமுக கட்சியில் பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. OPS ஆ அல்லது EPS ஆ யார் தலைவர் என்ற குழப்பம் நிலவி வந்தது. OPS ஆதரவாளர்கள் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தான் தலைவர் என்று கோஷமிட்டு வந்தனர். EPS தரப்பு எடப்பாடி அவர்கள் தான் தலைவர் என்று மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டார்கள். OPS உண்மையான விசுவாசி அல்ல அம்மா OPS அவர்களை கூப்பிட்டு கண்டித்து உள்ளார்கள் என்று EPS தரப்பு தெரிவித்து வந்தது.

அதிமுக எதிர்க்கட்சியான திமுகவுடன் OPS அவர்களுக்கு நல்ல பழக்கம் இருப்பதாகவும் ஸ்டாலின் அவர்களை பார்த்து OPS சிரித்தார் என்றெல்லாம் பேசிவந்தார் OPS தரப்பு. கடுமையான வாக்குவாதம் பிரச்சனையாக வெடித்தது. அதிமுகவின் தாற்காலிக்காக பொது செயலராக EPS தேர்தெடுக்கப்பட்டார். அதிமுக அலுவலகம் முன்பு பெரிய கலவரமே நடந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைக்கப்பட்டது. தற்பொழுது நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், செங்கோட்டையன், சீவி சண்முகம் ஆகியோரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் பன்னீர்செல்வம். இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓபிஎஸ் அவர்களின் மகன் ஓபி ரவீந்திரநாத் உட்பட 18 பேரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பையும் அறிவித்திருந்தார்.

அதிமுக கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். ஓ பன்னீர்செல்வம். பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்த அதிமுக லெட்டர் பேடில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டு இந்த நீக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த அதிமுகவினர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Exit mobile version