தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, முதன்முறையாக மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
யுவன் மலையாள சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், ஹீரோவாகவும் வலம் வரும் ஜோஜு ஜார்ஜ் பணி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.
அதிரடி ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவான அந்தப் திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் இந்த இரண்டாவது படத்திற்கு பரிபாடி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில்தான் யுவன் சங்கர் ராஜா, மலையாளத் திரையுலகில் முதல் முறையாக தடம் பதிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் இந்த படம் மூலம் மோலிவுட் தடம் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.










