Thursday, September 10, 2026
-- Advertisement--

இளம் வீரரின் அதிரடி பதிலடி.. சஞ்சய் மஞ்சரேக்கர் சொன்னது என்ன?

வைபவ் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார்.  முன்பு இந்தத் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா ஏ – இலங்கை ஏ அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது ஏற்பட்ட சர்ச்சையால் வைபவ் சூர்யவன்ஷி பேசப்பட்டார்.

அப்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “நான் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகவோ அல்லது மேலாளராகவோ இருந்திருந்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய ஏ அணியின் ஆடும் லெவனில் வைபவ் சூர்யவன்ஷியைச் சேர்த்திருக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியைப் பார்த்த பிறகு, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் அவரை பாராட்டும் வகையில் பதிவிட்டிருந்தார். “50 ஓவர் கிரிக்கெட்டை இன்னும் கூடுதலான அதிரடியை உருவாக்கக்கூடிய ஒரு வடிவமாக வைபவ் பார்க்கிறார் என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்!

குறிப்பாக, முதல் 10 ஓவர்களுக்கு வட்டத்திற்கு வெளியே ஆறு ஃபீல்டர்கள் அல்ல, இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள்” என்று சஞ்சய் கூறிப்பிட்டுள்ளார். சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இதற்கு முன்பு கூறிய கருத்துக்கும் அவரது தற்போதைய கருத்துக்கும் சமூக ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சிலர் அவர் இப்போது “தனது தவறை உணர்ந்திருக்கலாம்” என்று கூறுகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles