“யானை முகத்தான்” படத்தில் விநாயகர் வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு. இந்த படத்தை ரெஜிஸ் மிதிலா இயக்குகிறார். இவர் மலையாளத்தில் லால் பகதூர் சாஸ்திரி, வழிகுழியிலே, கொலபாதகம், இன்று முதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். முதல்முறையாக தமிழ் படம் இயக்க வந்திருக்கிறார்.

அவர் கூறியது தமிழ் சினிமாவில் தடம் பதிப்பது தான் எனது லட்சியமாக இருந்தது. அது தள்ளி போய் கொண்டே இருந்ததால் மலையாள படங்களை இயக்கி வந்தேன். இப்போதுதான் தமிழ் படம் இயக்க சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. இந்த படத்தை நானே தயாரிப்பதால் சௌகரியமாக இருக்கிறது.

நான் இயக்கிய மலையாள படத்தில் ரமேஷ் திலக் நடித்த அவரிடம் அந்த படத்தின் கதையை சொன்னேன். யோகி பாபு நடித்தால் நன்றாக இருக்கும் என்றார் அவரை யோகி பாபுவை சந்திக்க ஏற்பாடு செய்தார். கதையை கேட்டதும் இதில் நடிக்க யோகி பாபு ஒப்புக்கொண்டார்.

கதைப்படி சென்னையில் ஆட்டோ டிரைவராக இருக்கும் ரமேஷ் திலக் தீவிரமான விநாயகர் பக்தர். அதே சமயம் கொஞ்சம் போய், பித்தலாட்டம் என இருக்கிறவர். அவர் முன்னாள் வந்து “நான் விநாயகர்” னு அறிமுகம் ஆகிறார். யோகி பாபு அவர் நம்ப மாட்டார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை கதை.

இதில் யோகி பாபுவுக்கு இரட்டை வேடம் அதில் இரண்டு வித பாணியை வெளிப்படுத்தி உள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் இருப்பதாலும் எமோஷனுக்கும் படத்தில் முக்கிய பங்கு இருக்கிறது. முதல் பாதையில் சென்னையிலும் இரண்டாம் பாதியில் ராஜஸ்தானிலும் கதை நடக்கும்.