யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்றுத் தரும் டீச்சராக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற மாபெரும் வெற்றிப் படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் பெரிதாக கவனிக்கப்படாத யாஷிகா ஏடாகூட படமான ஒன்றில் நடித்து பெரிய பிரபலத்தை அடைந்தார்.
இரட்டை வசனங்கள் கிளாமர் காட்சிகளில் தாராளம் காட்டி இருந்தார். அதன்பின் மேலும் பிரபலம் அடைய நினைத்த யாஷிகா கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார்.
பிக்பாஸ் பிறகு புதிய ஷோரூம் மற்றும் கடைகளைத் திறந்து வைப்பதும் பல்வேறு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்று கொண்டு தமிழ் படங்களிலும் நடித்து வந்தார். SJ சூர்யாவுடன் கடமையை செய் என்ற படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த யாஷிகாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஈசிஆர் ரோட்டில் கார் விபத்துக்குள்ளாகி அவரது நண்பர் பவானி என்பவரை சம்பவ இடத்தில் பறிகொடுத்தார். காரை ஓட்டி வந்த யாஷிகா படுகாயங்களுடன் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.
தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வரும் யாஷிகா மீண்டும் படங்களில் நடிப்பது போட்டோ ஷூட் செய்வது என்று தனது பணிக்கு திரும்பியிருக்கிறார்.
விட்ட மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக யாஷிகா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அடேங்கப்பா இப்படி எல்லாமா போஸ் கொடுப்பது என்று ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் பெருமூச்சு விடுகின்றனர் பலர் சமூக வலைதளங்களில் இது போன்ற புகைப்படங்களை முதலில் தவிருங்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.