பிரசாந்த்,வடிவேலு, கிரண் நடிப்பில் வெளிவந்த நகைச்சுவை படம் வின்னர். இப்படம் வெளிவந்த போது நல்ல வரவேற்பை மக்களிடையே பெறவில்லை.
மேலும் இப்படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. கைப்புள்ள வடிவேலு என்று சொன்னாலே சிரிப்பு வரும் வகையில் அவர் நடிப்பு இருக்கும்.

இப்படத்தை தயாரித்தவர் இராமச்சந்திரன். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் பெரும் நஷ்டத்தை இவருக்கு ஏற்படுத்தியதால் இவர் ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்தார்.
இதனை ஒரு பேட்டியில் அவர் கூறுவதை பார்த்த இயக்குனர் பாலா, அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் தரவே அவர் படங்களில் நடித்து கடனை அடைந்துள்ளார்.











