திருப்பூர்: திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது விசைத்தறி நெசவாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்
நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யும் வகையில் அரசுக்குச் சொந்தமான உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.முக்கிய நகரங்களில் கைத்தறி விற்பனை நிலையங்கள், ஷோரூம்கள் அமைக்கப்படும். கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1,500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
விவசாயிகளுக்கான அறிவிப்புகள்: 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி, அதற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கப்படும்










