சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். இதில் அதிருப்தியாக அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
இதில் குதிரை பேரம் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். தாராபுரம் எம்எல்ஏவாக இருந்த சத்தியபாமா, தனக்கு தவெக அளித்த வாக்குறுதி என்ன என்று உடைத்து பேசியுள்ளார்.
தவெகவில் இணைந்துள்ள தாராபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “என்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்காக நான் நிறைய வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன்.
நான் தவெகவிடம், நான் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தான் கோரிக்கை வைத்தேன்.
அமைச்சர் ஆதவ் மற்றும் முதலமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தேன். மக்களுக்காக வைக்கும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினர்.










