Sunday, September 6, 2026
-- Advertisement--

வெள்ளை அறிக்கை என்றால் என்ன? பேப்பர்களின் நிறங்கள் சொல்லும் தகவல்கள்!

இந்த வெள்ளை அறிக்கை என்பது இடத்துக்கு ஏற்ப பொருள் மாற்றி பயன்படுத்தப்படும். முதலீட்டிலும், அரசியலிலும், சமூகத்திலும், வளர்ச்சித் திட்டங்களிலும் இடத்துக்கு ஏற்ப அதன் அம்சம், பொருள் வேறுபடும்.வெள்ளை அறிக்கை என்பது வேறொன்றும் இல்லை, ‘வெளிப்படைத் தன்மையாக இருக்கிறோம்’ என்பதை ஓர் அரசு, மக்களிடத்தில் தெரிவிப்பதுதான். அதாவது முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நிதிநிலையை கையாண்ட விதம், திட்டங்களை செயல்படுத்திய விதம் குறித்து நடப்பு அரசால் வெளியிடப்படும் ஆழமான, தெளிவான பார்வையுடன் மக்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகும்.

இதன் மூலம் அரசில் இருக்கும் சிக்கல்கள், எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் பிரச்சினைகள், தீர்வு, செயல்முறை ஆகியவை விரிவாக மக்களிடம் தெரிவிப்பதாகும். ஒரு விஷயத்தின் முழுமையை, ஆழமாக தெரிவிக்கவும், எதிர்காலம் குறித்த திட்டங்கள், சிக்கல்கள் குறித்து தெரிவிக்கவும் வெள்ளை அறிக்கை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு வெள்ளை என்ற வண்ணம் ஏன் பயன்படுத்தப்படுகிறது? சிவப்பு, மஞ்சள், கருப்பு, பிங்க், பச்சை என்று சொல்லியிருக்கலாமே என்ற கேள்வி எழலாம்.

மேலும், தொழில் துறை, நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் நிர்வாகம் மாறும்போதும், புதிய நிர்வாகம் பதவிக்கு வரும்போதும், கடந்த நிர்வாகம் குறித்த வரவு செலவு அறிக்கை, லாபம், இழப்பு, திட்டங்கள், சேமிப்பு ஆகியவை குறித்த தெளிவான அறிக்கைக்கும் வெள்ளை அறிக்கை என்ற வார்த்தை பயன்படுகிறது.வெள்ளை நிறம் நம்பகத்தன்மையையும் விசுவாசத்தையும் குறிப்பதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles