Thursday, September 29, 2022
-- Advertisement--

வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ள இந்த புதிய அம்சங்கள் பற்றி தெரியுமா…!!! வீடியோ கால் பேசுபவர் நீங்கள் இதை அப்டேட் உங்களுது தான்.

வாட்ஸாப் இனி புதிய வசதிகளுடன்

தகவல் தொழில்நுட்பத்தில் மொபைல்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.அதிலும் முக்கியமாக மொபைல் டேட்டா பயன்பாடு ஒரு நாளில் உலகம் முழுவதும் டெரா பைட் அளவு உபயோகிக்கும் நடைமுறை உள்ளன, அதிலும் குறிப்பாக வாட்ஸாப், பேஸ்புக் செயலிகள் பயன்பாடு புது உச்சத்தை அடையும் வேளையில், மிகச்சிறந்த தகவல் பரிமாற்ற சமூக வலைத்தளமான வாட்ஸாப் செயலியில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கோப்பு அளவு அதிகரிப்பு:

பொதுவாக வாட்ஸாப் பயன்பாடுகளில் புகைப்படங்கள் ,ஆடியோ மற்றும் வீடியோக்கள் டேட்டா அளவு பழைய நடைமுறையில் 16 MB அளவிலேயே மற்றவர்களுக்கு பகிரமுடியும் , ஆனால் தற்பொழுது 2GB அளவிலான டேட்டாக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். இதன் மூலம் நிறைய தகவல்களை நாம் மற்றவர்களுக்கு பரிமாறலாம் .,

ஒரே நேரத்தில் 512 நபர்களுடன் கருத்துக்களை பரிமாறலாம்.

முன்பு வாட்ஸாப் குழுக்களை உருவாகும்பொழுது அதிகபட்சம் 256 நபர்களை சேர்க்கலாம் , ஆனால் தற்பொழுது 512 நபர்களை இணைக்கலாம் .,இதன்முலம் அதிகபட்சம் நபர்களுடன் உரையாடலாம்.,இவற்றை

  1. வாட்ஸாப் பயன்பாடு சென்று வலதுபுற முனையில் தோன்றும் மூன்று புள்ளிகளையோ தேர்ந்தெடுத்து கொள்ளுதல் வேண்டும்

2.பின்பு “New Group ” option -யை தேர்ந்தெடுத்து புதிய குழுவை தங்களுக்கு தேவையான நபர்களை இணைத்து கொள்ளலாம்

3.இதன் மூலம் 512 நபர்களை இணைத்து கலந்துரையாடலாம் .

வீடியோகால்கள் நபர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு :

பழைய நடைமுறை வாட்ஸாப் கால்களில் ஒரு குரூப் வீடியோ கால் செய்வதற்கு 8 பயனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படடனர், ஆனால் தற்பொழுது 32 பயனர்கள் வரை ஒரே காலில் இணையலாம் இவற்றையெல்லாம் நீங்கள் வாட்ஸாப் செயலியை “அப்டேட் ” (update ) செய்வதாம் மூலம் பெறலாம் மற்றும் பல்வேறுவகையான “எமோஜி ” குறியீடுகளையும் குழுக்களை அனுப்பும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது .

மேலும் கூடிய விரைவில் மொபைல் எண்களை “save” செய்யாமலே மற்றவர்களுடன் உரையாடும் வசதியை கொண்டு வர உள்ளது.அதாவது நபர்களின் பெயர்களை சேமிக்காமலே நீங்கள் நேரிடையாக மற்றவர்களுடன் தகவல்களை பகிரலாம்

Author: RAMPRAKASH STEACHING FACULTY / CSE UNIVERSITY COLLEGE OF ENGINEERING THIRUKKUVALAI(A Constituent College of Anna University::Chennai)THIRUKKUVALAI

Related Articles

Stay Connected

205,534FansLike
0FollowersFollow
5,645FollowersFollow
- Advertisement -

Latest Articles