சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அண்மையில் அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் நாம் கடினமான காலத்தை எதிர்கொள்ள வேண்டும். குடிமக்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
சர்வதேச பொருளாதார கொந்தளிப்புகளில் இருந்து உலக நாடுகள் எதுவும் தப்பிக்க முடியாது என்றபோது சிங்கப்பூர் போன்ற சிறிய தீவு தேசம் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால், நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் இந்தக் கடின காலத்தை கடந்து செல்லக் கூடிய வகையிலான திட்டங்களும், திறனும் அரசிடம் இருக்கிறது. ஒன்றாக மீண்டெழுவோம.” என்று கூறியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதனை முன்னரே பேசிவிட்டார். “பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உலக அளவில் உயர்ந்துள்ளது. இத்தகையச் சூழலில் அவற்றை வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை, பெட்ரோல் – டீசலை சேமிப்பதன் மூலம் அதை மிச்சப்படுத்துவது நமது பொறுப்பு. இதே நிலைதான் சமையல் எண்ணெய்க்கும். அதன் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இது தேசபக்திக்கு சிறந்தவொரு பங்களிப்பாக இருக்கும். குடும்பங்களின் ஆரோக்கிய ரீதியாவும், தேசத்துக்கு பொருளாதார ரீதியாகவும் நலன் சேர்க்கும்” என்று கூறியிருந்தார்.
எரிபொருள் விலையேற்றம் எப்போது நடந்தாலும் FMCG (Fast-Moving Consumer Goods ) எனப்படும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் மீதே உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மக்கள் அதிகம் அடிக்கடி நுகரும் உணவுப் பொருட்கள் விலை உயரும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதே சரியானதாக இருக்கும். இது நிச்சயமாக 3, 4 மாதங்களில் மாறிவிடும்” என்றார்.










