சமீபகாலமாக சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. காரணம் சீரியல்களில் ஏற்பட்டதை மாற்றங்கள். முன்பு உள்ள சீரியல் போல் அழுகை, வில்லத்தனம் என்று இல்லாமல் தற்போது காதல், கல்லூரி, பிரெண்ட்ஷிப் என பல கதைகளை சீரியலில் கொண்டு வருவதால் சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது. எல்லாவித வயது ரசிகர்களையும் சீரியல் ஈர்த்துள்ளது.

இதனால் தொலைக்காட்சிகள் டிஆர்பி ரேட்டை ஏத்த சீரியல்களை போட்டி போட்டு வெளியிட்டு வருகின்றனர் .விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோரும் ஒன்று. குடும்ப கதையை பின்னணியாகக் கொண்ட இந்த சீரியலில் குறிப்பாக கதிர் முல்லை ஜோடிக்கு ரசிகர்கள் அதிகம். இவர்கள் குறித்து நிறைய இன்ஸ்டாகிராம் குறிப்புகளும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

இதில் முல்லையாக நடிக்கும் சித்ரா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன் பிறகு சிறு சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் சிகை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒரு சிகை அலங்காரம் மற்றும் ஸ்டைல் அனைத்து பெண்களையும் கவரும் வண்ணம் உள்ளது.

இதனால் ஊரடங்கு காரணமாக சீரியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வீட்டில் இருக்கும் சித்ரா பாண்டியன் ஸ்டோர் முல்லையை யாரும் மிஸ் பண்ண கூடாது என்று சொல்லி,பாண்டியன் ஸ்டோர் இல் உள்ள முல்லை ஸ்டைலில் உடை உடுத்தி சேலையில் மிக அழகாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.



