சின்னத்திரை தொகுப்பாளர்களில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்தவர் வி.ஜே.ரம்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர்-1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இவர் தனக்கு என்று ஒரு ஸ்டைலை தொகுத்து வழங்கும் விதத்தில் வைத்துள்ளார். இவருக்கு பல ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
இந்நிலையில் ரம்யா சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் திருமண வாழ்க்கை ஒரு சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிவடைந்தது. அதன் பிறகு மீண்டும் தன் பழைய புத்துணர்வோடு சமீபகாலமாக சில பட புரமோஷனுக்கு தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் மாட்டுவண்டி பக்கத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பயணம் செய்ய தயாராகி விட்டீர்களா என கருத்து கூறி வருகின்றனர்.