சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பல வருடங்களாக இருப்பவர் தான் VJ அர்ச்சனா. முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் விஜய் அர்ச்சனா கலந்துகொண்டு தொகுத்து வழங்கினார். காமெடி டைம் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அர்ச்சனாவை காமெடி டைம் அர்ச்சனா என்று தான் முதலில் அழைத்து வந்தார்கள் அதன்பின் விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அர்ச்சனாவிற்கு ஜீ தமிழில் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது அதனை தொடர்ந்து பல வெற்றி நிகழ்ச்சிகளை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார் அர்ச்சனா சில நிகழ்ச்சிகளில் தனது மகள் சாராவுடன் கலந்து கொண்டு சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ச்சனா மேலும் பிரபலம் அடைந்தார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய MR & MRS சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அர்ச்சனாவுக்கு மூளையில் சிறிய கட்டி ஒன்று இருந்ததால் அதனை ஆபரேஷன் செய்து எடுத்தார்கள் அர்ச்சனாவின் உடல் நிலை பற்றி அவருடைய மகள் சாரா தான் அப்டேட் செய்து வந்தார்.
தற்பொழுது நலம் ஆகி மீண்டும் இயல்பு நிலைக்கு வந்த அர்ச்சனா பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அம்மாவைக் குஷிப்படுத்த அர்ச்சனாவின் மகள் சாரா தனது அம்மாவின் திருமண உடையை அணிந்து தனது அம்மாவை அர்ச்சனாவை சந்தோஷப்படுத்தி உள்ளார். தன்னுடைய திருமண உடையில் தனது மகள் கொள்ளை அழகில் இருப்பதாய் பார்த்த அர்ச்சனா புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு உள்ளார்.