அனிகா சுரேந்திரன், தல அஜித்தின் “விஸ்வாசம்” படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அனைவரையும் தன் வசம் இழுத்தவர் என்றே சொல்லலாம். முதலில் மலையாள சினிமாவில் நடித்த அனிகா. தல அஜித்தின் “என்னை அறிந்தால்” படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து இருந்தார். அந்த படத்தில் அஜித்தும் – அனிகா இருவரும் “உனக்கென வேணும் சொல்லு” பாடலில் நிஜ தந்தை மகள் போல நடித்து அசத்தினார்கள். அதன் பின் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

மூன்று வருடங்கள் இடைவேளைக்கு பிறகு தல அஜித்தின் “விஸ்வாசம்” படத்தில் மறுபடியும் மகளாக நடித்து இருந்தார். அந்த படத்தில் அனிகாவின் நடிப்பை பார்த்து அசந்து போனார்கள். இப்படி இந்த பொண்ணு நடிக்குது இந்த பொண்ணுக்கு நல்ல எதிர்காலம் என்று பிரபலங்கள் பாராட்டு மழை அனிகாவிற்கு கிடைத்தது. விஸ்வாசம் படத்தின் “கண்ணான கண்ணனே” பாடல் இன்றும் பல பெண் பிள்ளைகள் பெற்றவர்களின் வீட்டில் ஒளித்து கொண்டு தான் இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் எப்பவும் நான் தளபதி ரசிகை. எனக்கு தளபதி விஜய் தான் ரொம்ப பிடிக்கும். சிறுவயதில் இருந்து நான் விஜயின் தீவிர ரசிகை. அவருடைய நடனம் மற்றும் சண்டை காட்சிகளை விரும்பி பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.