நடிகர் விஷால் பல வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மதகஜராஜா படத்தின் மூலம் வெற்றிபெற்றவர்.12 வருடம் கழித்து 2025 பொங்கலுக்கு வெளியான படம் வசூலை அளிக்குவித்தது. அதா படம் கொடுத்த நம்பிக்கையில் பல வருடங்களாக பெட்டியில் கிடப்பில் போட்டு வைத்து இருந்த படங்களை எல்லாம் ரிலீஸ் செய்ய ஆரம்பித்தார்கள் தயாரிப்பாளர்கள்.
தற்பொழுது விஷால் துப்பறிவாளன்2 படத்தில் இயக்கி நடித்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே சற்று உடல் நலத்தில் சில பிரச்சனைகளை உள்ள இந்நேரத்தில் விழுப்புரம் அருகே கூத்தாண்டவர் கோவிலில் நடைபெறும் மிஸ் திருநங்கை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் திடீர் என்று மயக்கம் அடைந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷாலுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில் விஷாலுக்கு நெருக்கமானவர்களிடம் இதை பற்றி சிலர் கேட்கையில் விஷால் மதியம் சாப்பிடவில்லை ஜூஸ் மட்டுமே எடுத்துக்கொண்டார் அதனால் தான் மயக்கம் என்று மழுப்பி வருகிறார்கள்.