விருச்சிக ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
விருச்சகம்
பிரஷர், இடது பக்க தேக ஆரோக்கியம் சிறிது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். காலில் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் அபிராமி அந்தாதி படிக்கலாம் ஏனென்றால் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்தில் சனி வருகிறார். அபிராமியில் இருக்கக்கூடிய 40 59 75 போன்றவற்றை படிக்க வேண்டும் குழந்தை பிறக்கவில்லை என்றாலும் குழந்தை இல்லை என்றாலும் அந்த 59 பக்கத்தை படித்தால் வரக்கூடிய சந்ததிக்கு நல்லது பண்ணும் அதேசமயம் வாகனம் விற்பது கூடாது.
அதேசமயம் சுப வீரியம் கண்டிப்பாக ஏற்படும் பணம் அதிகமாக புழங்கக்கூடிய ராசி விருச்சகம் ஏனென்றால் எட்டில் குரு குரு தன்னுடைய சொந்த வீடான இரண்டாம் இடத்தை பார்க்கப் போகிறார். அதிகமாக விருச்சக ராசி பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்குவார்கள் நகை நட்டுகளை வாங்குவார்கள் வீடு நிலங்களை வாங்குவார்கள் கால்நடை வாங்குவார்கள் வளர்ப்பு பிராணிகளை அதிகமாக வாங்கக்கூடிய ராசி விருச்சக ராசிகாரர்கள்.
வீட்டில் ஒரு அழகான மீன் தொட்டியாவது வாங்குவார்கள் அதேபோல் எல்லாவற்றிலும் முன்னேற்றம் ஏற்படும் சுப வீரிய பிராப்தம் விருச்சக ராசிக்காரர்கள் இருக்கக்கூடிய வீட்டில் நல்லது அதிகரிக்கக் கூடிய காலகட்டம். எதிர்பார்க்காத இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். தாய் வழி வரவு தந்தை வழி வரவு அணுகூலத்தை தரும்.
கண்டிப்பாக 10-ஆம் இடத்தில் இருக்கக்கூடிய கேது தொழிலில் தொந்தரவு செய்வார். காரியசித்தி மாலை என்று ஒரு மந்திரம் இருக்கும் பிள்ளையார்பட்டிக்கு போயிட்டு வருவதும் காரியசித்தி மாலை மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லனும்னு இல்ல போட்டுவிட்டா நீங்க பாட்டுக்கு உங்க வேலைகளை பார்க்கலாம். அந்த மந்திரத்தை கேட்டுக் கொண்டு இருந்தாலே போதும் பெரிய வெற்றிகளும் அனுகூலத்தையும் தரும். வாகனத்தில் வித்தைகள் காட்டினீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த வருடம் முழுவதும் மருத்துவமனைக்கு செல்வதும் வீட்டிற்கு வருவதுமாக தான் இருக்கும் அதில் மட்டும் கவனம் தேவை.
பரிகாரம்
வைத்தீஸ்வரன் இல்லையென்றால் பட்டீஸ்வரன் துர்க்கை மிக முக்கியம் கண்டிப்பாக இவர்களை வழிபடுவது மிக நல்லது.










