Tuesday, September 8, 2026
-- Advertisement--

ஐபிஎல் புகழ் நிரந்தரம் அல்ல.. இளம் வீரர்களுக்கு கோலி முக்கிய அறிவுரை!

இளம் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் மூலம் கிடைக்கும் உடனடி புகழும், பெரும் பண வருமானமும் மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், நீண்டகால அர்ப்பணிப்புடன் உலக கிரிக்கெட்டில் மரியாதை பெறும் நோக்கத்துடன் விளையாட வேண்டும் என்று லெஜண்ட் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.

களத்துக்குச் சென்று பந்தை அடித்து நொறுக்கி விளையாடினால் போதும்’ என்று நினைக்கலாம். ஆனால் இன்னொரு பாதையும் இருக்கிறது. ‘நான் 15 அல்லது 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும். உலக கிரிக்கெட்டின் மரியாதையையும், என் முன்னோடிகளின் பாராட்டையும் பெற வேண்டும்.

இந்த வாய்ப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்’ என்று நினைக்கும் பாதையும் உங்களுக்கு உள்ளது. அது முற்றிலும் வேறுபட்ட மனநிலை. அப்படி சிந்திக்க மிகுந்த உந்துசக்தி வேண்டும்.

அதற்காக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் என்னை தயார்படுத்த வேண்டும். உங்கள் திறமைகளை வெளிக்கொணர மனதளவில் நீங்கள் எடுக்கும் முடிவுகள்தான் முக்கியம்” என்று இளம் வீரர்களுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles