கமலஹாசன் நடிப்பில் ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஃபகத் பாசில் என்று முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் ஒரு சர்ப்ரைஸ் ஆன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூர்யா.
சூர்யா இந்தப் படத்தில் நடித்திருப்பது சஸ்பென்சாக வைத்திருந்த படக்குழு சூர்யா விக்ரமில் நடித்திருப்பது வெளிவரத் தொடங்கியதும் மௌனத்தைக் கலைத்தனர். கமல்ஹாசன் அவர்களும் விக்ரம் படத்தின் புரமோஷனுக்கு மலேசியா சென்ற போது கூட விக்ரம் மூன்றாம் பாகம் விஜயுடன் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு உங்களுக்கே தெரியும் வேறொரு நடிகர் நடிக்கிறார் என்று சூர்யாவை மறைமுகமாக கூறியிருந்தார்.
விக்ரம் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் ரசிகர்கள் சமீபகாலமாக திரைக்கு வந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் திரையரங்கு உரிமையாளர்கள் சற்று வருத்தத்தில் இருக்க சிவகார்த்திகேயனின் திரைப்படம் DON நல்ல வசூலை செய்திருந்தது அதுபோல விக்ரம் படம் நிச்சயம் நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் இந்நிலையில் விக்ரம் படத்தை முதன் முதலில் பார்த்த பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் விக்ரம் சூப்பர் உலக நாயகனுக்கு நன்றி லோகேஷ், ஃபகத் பாசில், விஜய்சேதுபதி அனிருத் மொத்த டீமுக்கும் நன்றி கண்டிப்பாக இது பிளாக்பஸ்டர் என்று கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் டான் படத்தை பார்த்துவிட்டு நிச்சயம் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கூறியிருந்தார் அதுபோல DON ஹிட்டானது தற்பொழுது விக்ரம் படத்தை பார்த்துவிட்டு பிளாக்பஸ்டர் என்று கூறியுள்ளார்.
விக்ரம் படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டிஸ்ட்ரிபியூட் செய்வது குறிப்பிடத்தக்கது.