தமிழ் சினிமாவில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு கையில் படம் வைத்துஇருக்கும் நடிகர் விஜய்சேதுபதி. இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம். சாதாரண துணை நடிகராக இருந்து, துணை கதாநாயகனாக மாறி தற்போது தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத நடிகர்களில் ஒருவராக இவர் வளர்த்துள்ளார்.
அதற்கு முக்கிய காரணம் இவர் சினிமா மீது வைத்து இருந்த பற்றுஅற்ற காதலே ஆகும். இவருக்கு மிக பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம், நடுவுல கொஞ்சம் பாகத்தை காணோம், மற்றும் பீட்சா ஆகியன ஆகும். அதன் பிறகு இவர் நடித்த அணைத்து படங்களுமே நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தந்தன.
இந்நிலையில் இவர் 2003 ஆம் ஆண்டிலேயே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சூரியா சேதுபதி என்ற மகனும், ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர். அண்மையில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது தன் குடும்பத்தினருடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகவும் வைரலாகி வருகின்றது.