தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த தவெகவின் புதிய அமைச்சரவை விரிவாக்கப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மொத்தம் 23 புதிய அமைச்சர்கள் இந்த விரிவாக்க பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸுக்கு இடம் கிடைக்குமா என்ற இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள 23 புதிய அமைச்சர்கள் பட்டியலில் ஒருவழியாக காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
டெல்லி மேலிடத்தின் தீவிர பேச்சுவார்த்தை மற்றும் உள்ளூர் அரசியல் கணக்குகளின்படி இந்த 2 இடங்கள் காங்கிரஸுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.காங்கிரஸ் தனக்கான 2 இடங்களை தட்டித்தூக்கியுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் இன்னும் கூடுதலாக 2 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன.
நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, இந்த 2 இடங்களும் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) ஆகிய கட்சிகளுக்காகவே பிரத்யேகமாக ‘ரிசர்வ்’ செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
கடந்த வாரம் நடைபெற்ற தமிழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது (Floor Test), அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) உத்தரவை மீறி, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி முகாம்களைச் சேர்ந்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் TVK அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள 23 புதிய அமைச்சர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் மற்றும் அவர்களின் தொகுதிகள் பின்வருமாறு:
ஸ்ரீநாத் – தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி (214) எஸ். கமல் – அவினாசி சட்டமன்றத் தொகுதி (112) சி. விஜயலட்சுமி – குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி (97) ஆர்.வி. ரஞ்சித்குமார் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி (37) வினோத் – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி (171)
ராஜீவ் – திருவாடானை சட்டமன்றத் தொகுதி (210) பி. ராஜ்குமார் – கடலூர் சட்டமன்றத் தொகுதி (155) வி. காந்திராஜ் – அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி (38) பி. மதன் ராஜா – ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி (217) கே. ஜெகதீஸ்வரி – ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி (202)
எஸ். ராஜேஷ் குமார் – கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி (234) எம். விஜய் பாலாஜி – ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி (98) டி. லோகேஷ் தமிழ்செல்வன் – ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி (92) ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் – சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி (90)
ரமேஷ் – ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி (139) பி. விஸ்வநாதன் – மேலூர் சட்டமன்றத் தொகுதி (188) ஆர். குமார் – வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி (26) கே. தென்னரசு – ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி (29) வி. சம்பத் குமார் – கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (118) ஜெ. முகமது பர்வாஸ் – அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி (183) டி. சரத்குமார் – தாம்பரம் சட்டமன்றத் தொகுதி (31) என். மேரி வில்சன் – டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் [ஆர்.கே. நகர்] (11) கே. விக்னேஷ் – கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி (122)










