Tuesday, June 16, 2026
-- Advertisement--

பிரபல நடிகர் படத்தில் மீண்டும் நடிக்கும் கேப்டன் விஜயகாந்த்..!!! சந்தோஷத்தில் ரசிகர்கள்.

விஜயகாந்த் மாபெரும் நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே விஜயகாந்த் நடிக்கும் படங்களில் நல்ல கருத்துக்கள் இருக்கும் குறிப்பாக தேசப்பற்று சம்பந்தப்பட்ட படங்களில் விரும்பி நடிப்பார்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா படம் இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது அனைவரும் அறிந்ததே. ஒருகாலத்தில் இவர் முதன் முதலில் சினிமாவில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார் அப்போது இவருடைய தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று விஜயகாந்த் கண்முன்னே வேறொரு நடிகரை அவர் நடித்த படத்துக்கு ஹீரோவாக நடிக்க வைத்தார்கள்.

எப்படியாவது சினிமாவில் சாதித்து முன்வரவண்டும் என்று நினைத்து விஜயகாந்த் நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் நடித்து மக்கள் மனதில் பெரிய இடத்தையும் பிடித்தார். தேமுதிக என்ற கட்சி ஒன்றை துவங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியலில் இறங்கினார். மக்களும் விஜயகாந்திற்கு அமோக வரவேற்பு கொடுத்தனர்.

அரசியலில் வெற்றியையும் கண்டார் விஜயகாந்த் ஆனால் அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தனது நிதானத்தை இழக்க ஆரம்பித்தார் கம்பீரமான விஜயகாந்தின் தற்போதைய நிலை பார்த்து கட்சித் தொண்டர்கள் மட்டும் அல்லாமல் ரசிகர்களும் வருத்தப்பட்டு வந்தனர்.

வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் தற்பொழுது பேச முடியாமலும் நடக்க முடியாமலும் தவித்து வரும் இந்நிலையில் கூட கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு தனது தொண்டர்களை ஊக்குவித்தார்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாகவும் கேப்டன் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜயகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை படக்குழுவினர்கள் தெரிவித்தார்கள்.

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை விஜய்மில்டன் இயக்கவுள்ளார் படத்தில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவருடைய வீட்டிலேயே படமாக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம் படக்குழுவினர்.

சினிமா மீது உள்ள தீராத காதலால் விஜயகாந்த் இன்றும் இந்த நிலையிலும் நடிக்க வருவது ரசிகர்களிடம் பெரும் நிகழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles