விஜய் தொலைக்காட்சியில் ஒரே மாதிரியான கதைகளத்தில் பல சீரியல்கள் இருந்தாலும் மக்கள் விஜய் டிவியை நிறுத்துவதில்லை. ஒரு சில சீரியல்கள் விஜய் டிவியில் கதைக்களம் வேறு மாதிரியாக இருக்கும்.

அதுபோல விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு வித்தியாசமான கதைக்களத்தோடு வெளியான சீரியல் மௌன ராகம். மௌன ராகம் இரண்டாம் பாகம் தற்பொழுது நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த கதைகளத்தில் வரும் சுருதி, சக்தி, வருண், தருண் என்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளன.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் புது சீரியல்கள் நிறைய களமிறங்கி உள்ளதால் இப்பொழுது போய்க் கொண்டிருக்கிற சீரியல்களை முடிக்கும் தருவாயில் இயக்குனர்கள் வந்துள்ளனர்.

உதாரணத்திற்கு காற்றுக்கு என்ன வேலி சீரியலும் முடியும் தருவாயில் உள்ளது என பேச்சுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முதல் பாகம் முடித்து அடுத்த பாகத்திற்கு நகர்ந்துவிட்டது. அதுபோல பாரதிகண்ணம்மா சீசன் 1 முடிவடைந்து தற்போது சீசன் 2 போய்க்கொண்டிருக்கிறது.

அது போலவே தற்பொழுது இளசுகளின் மனம் கவர்ந்த சீரியல் ஆன மௌனராகம் முடிவடைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காதம்பரி மற்றும் சுருதி தன் தவறை உணர்ந்து மனம் மாறுவதாக காட்சிகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பொன்னி என்று சீரியல் ஒளிபரப்பாக உள்ளதால் இந்த சீரியல் தான் முடியும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.