விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபிநாத்.

இவர் ஆரம்பகாலத்தில் ராஜ் தொலைக்காட்சியில் பணிபுரிந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் பணிபுரிய ஆரம்பித்தார். இவர் நீயா நானாவிற்கு முன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் நீயா நானா அளவிற்கு இவருக்கு புகழை எந்த நிகழ்ச்சியும் தரவில்லை.

மேலும் தமிழ் சின்னத்திரையில் கோட் சூட் போட்டு கொண்டு இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் இவர் கோட் சூட் கோபிநாத் என்றும் அழைக்கப்படுவார்.

இந்நிலையில் இவருக்கு துர்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து வெண்பா என்ற மகள் உள்ளார். தன மகள் கண்ணான கண்ணே பாடலுக்கு இசை வாசிக்கும் வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளன.