சின்னத்திரையில் இருந்து கொண்டே வெள்ளி திரையே திரும்பி பார்க்கும் அளவுக்கு தொகுப்பாளர் பணியில் 15 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து வருபவர் கோபிநாத்.

ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து, பிரபலங்கள் கலைஞர், ஜெயலலிதா , அஜித் போன்ற பல பிரபலங்களை பேட்டி எடுத்தவர் கோபிநாத். அதனை தொடர்ந்து நீயா நானா என பொதுமக்கள் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கோபிநாத்திற்கு நீயா நானா நிகழ்ச்சி பெரும் பெயரை பெற்று கொடுத்தது.

இதுவரை இந்திய தொகுப்பாளர்களையே 15 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பணிபுரியும் தொகுப்பாளர் ஒருவர் என்று பெருமை கோபிநாத் ஒருவற்கு மட்டுமே. இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகளும் வந்தன. அதிலும் நேர்த்தியாக தன் பணியை தொடர்ந்து செய்தார் கோபிநாத்.

சமீபத்தில் தனக்கென ஒரு யூடூப் சேனலை தொடங்கி உள்ள கோபிநாத் பொதுமக்களுக்கு தேவையான விஷயங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற பொழுது அங்குள்ள விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து வருகிறார்.

அதுபோல அங்கு ஒரு கிராமமே ஜெயிலாக உள்ளது. அங்கு உள்ள மக்கள் ஒரு காலத்தில் அந்த ஜெயிலில் தான் அடைக்கப்பட்டனர் அப்படி ஒரு கிராமத்திற்கு சென்ற கோபிநாத், அங்கு இருக்கும் பொழுது உள்ள குற்றவாளிகள் இருந்திருப்பார் என்ற ரீவிவ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கோபிநாத்தை ஜெயிலுக்குள் பார்த்ததும் சற்று அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அதற்கு பின் இருந்த விசயத்தை கண்டு ஆச்சரியப்பட்டு உள்ளனர்.
