Sunday, September 6, 2026
-- Advertisement--

விஜயின் கணிப்பு தவறிவிட்டதா? நடுவில் அதிமுக குறுக்கிட்டதா?

தேர்தல் பிரசாரத்தில் விஜய் சொன்னது போல் இரண்டு கட்சிகளுக்கு இடையே போட்டி இல்லாமல் மூன்று கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுவதையே காலை 10 மணி நிலவரம் காட்டியுள்ளது. காலை 10 மணி நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 103 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 71 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக 51 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

விஜய் வியக்கத்தக்க வகையில் தனிப்பெரும் கட்சியாக முன்னிலை வகித்து வருகிறார். தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில் அக்கட்சியின் அலுவலகத்திற்கும் விஜய் வீட்டிற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தவெக, திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது தெரிகிறது.

ஆனால்,இன்றைய களத்தில் அதிமுகவும் கடும் போட்டி கொடுத்து வருகிறது. சொல்லப்போனால் திமுக அதிமுக இடையே தான் போட்டியே என்று சொல்லும் அளவுக்கு அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அனைத்திலும் தவெகவே முன்னிலையில் உள்ளது.


Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles