தற்போது கொரானோ பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரனோ தாக்கம் அதிகம் ஆகி கொண்டே வருவதால் இந்நோய் என்பது குறையும், எப்போது ஊரடங்கு முடியும் என்ற ஏக்கமும் தவிப்பும் அனைவர் மனதிலும் எழுந்து வருகிறது.
மேலும் கொரானோ ஊரடங்கு காலத்தில் பசியால் பாதிக்கு மேல் நாட்டில் தவித்து வருகின்றனர். இவர்கள் பசியை போக்க அரசும், தன்னார்வலர்களும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் பசி இல்ல நாடு உள்ளதா என கேட்டால் அது கேள்வி குறிதான்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் விஜய்சேதுபதி தன் ட்விட்டர் பக்கத்தில் பசி இல்லாமல் இருக்க தடுப்பூசி ஏதேனும் உண்டா..? ஓ மை கடவுளே என ட்விட் செய்துள்ளார்.