காத்துவாக்குல 2 காதல் நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஒரே படத்தில் இரு முன்னணி நடிகைகள் விஜய் சேதுபதி நடிப்பதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது காத்துவாக்குல 2 காதல் வெற்றி பெற்றதா என்பதை பார்ப்போம் வாங்க.
கதை:
OLAவில் பணி புரியும் டிரைவராகவும் இரவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் BOUNCER ஆக பணிபுரிகிறார் ஹீரோ விஜய் சேதுபதி. சிறுவயதிலிருந்து எது செய்தாலும் ராசி இல்லாதவர் என்று சொல்லி துரதிர்ஷ்டசாலி என்று சொல்லி அனைவரும் ஒதுக்க வீட்டை விட்டு தனது தாயின் உடல் நிலைக்காக வெளியேறி தனியாக வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் அதிர்ஷ்டமே இல்லாமல் யாருடைய அன்பு கிடைக்காமல் தனியாக வாழ்ந்து வரும் விஜய்சேதுபதிக்கு நயன்தாராவும் சமந்தாவும் பழக்கம் ஆகிறார்கள் அவர்களின் அன்பை பெறுகிறார் விஜய் சேதுபதி. ஒரு கட்டத்தில் நயன்தாராவும் சமந்தாவும் விஜய்சேதுபதியை காதலிக்க தொடங்குகிறார்கள். விஜய் சேதுபதியும் இருவரையும் காதலிக்கிறார். கடைசியில் யாரை திருமணம் செய்து கொள்வார் என்பதை மீதி கதை.

விஜய் சேதுபதி ராம்போ என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் நீண்ட வருடங்களுக்கு பிறகு எதார்த்தமான மற்றும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதியை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. மீண்டும் நல்ல நடிகர் என்பதை நிருபித்து உள்ளார். நயன்தாராவை காதலிக்கும் போதும் சரி சமந்தாவை காதலிக்கும் போதும் சரி மனிதர் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார்.

நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்தில் அனைவர் மனதையும் கொள்ளை கொள்கிறார் குறிப்பாக நான் பிழை நீ மழலை என்ற பாடல் நயன்தாராவின் பெஸ்ட் ரொமான்டிக் சாங் ஆக அமையும். லேடி சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா படத்தில் எங்கெல்லாம் தன்னால் ஸ்கோர் செய்ய முடியுமோ கச்சிதமாக நடித்துள்ளார்.

சமந்தா கதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய்சேதுபதியுடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போதும் ரொமான்டிக் வசனங்கள் பேசும் போதும் இளைஞர்களிடம் கைத்தட்டல் அள்ளுகிறார். கொஞ்சம் கிளாமர் அசத்தலான நடிப்பு என்று கதீஜா கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் சமந்தா.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய வருங்கால மனைவி நயன்தாராவிற்கு மட்டும் நல்ல ஸ்கோப் கொடுக்காமல் உடன் நடித்த சமந்தாவிற்கு நயன்தாராவுக்கு சமமாக நடிக்க நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளார். ஒரு சீரியஸான கதையை இப்படியும் சொல்லலாமா என்று தனது எதார்த்தமான எழுத்தின் மூலம் இந்தப் படத்தை எடுத்துள்ளார். கொஞ்சம் இந்தக்கதையில் சுதப்பி இருந்தாலும் பல பிரச்சினைகளை சந்தித்து இருப்பார். விக்னேஷ் சிவன் யாரையும் எந்த விதத்திலும் புண்படுத்த கூடாது என்று நன்றாக புரிந்து கொண்டு கவனமாக திரைக்கதையை கையாண்டிருக்கிறார் சபாஷ்.

அனிருத் படத்தின் பெரிய தூண் என்று சொல்லலாம் இவருடைய பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தை வேறு ரகத்திற்கு கொண்டு செல்கிறது.
ப்ளஸ்:
விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பு.
விக்னேஷ் சிவன் கவிதையான இயக்கம்.
அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்.
இளமையான கதைக்கேற்ப நல்ல சுவையான ஒளிப்பதிவு.
மைனஸ்:
சொல்லுமளவிற்கு ஒன்றுமில்லை மொத்தத்தில் சமந்தா நயன்தாரா விஜய் சேதுபதி செய்த காத்துவாக்குல 2 காதல் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
ரேட்டிங்: 3.75 / 5
Verdict : Blockbuster