Saturday, October 17, 2026
-- Advertisement--

“4ம் தர அரசியல் செய்கிறார் விஜய்”.. கே.பி.முனுசாமி கடும் தாக்கு!

முதல்வர் விஜய் செய்வது மாற்று அரசியலா? மனசாட்சியை அடகு வைத்துவிட்டு செய்யும் அரசியலா? என்று அதிமுக நிர்வாகி கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார். நான்காம் தர அரசியல்வாதி போல் செயல்படும் நீங்களா தூயசக்தி என்றும் கொந்தளித்துள்ளார்.

அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. சட்டசபையில் நடந்த தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவின் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்எல்ஏ-க்கள் எதிராக வாக்களித்தனர்.

நேற்று மாலை தவெக ஆட்சிக்கு ஆதரவளித்த நிர்வாகிகளை கட்சிப் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன்பின் சிவி சண்முகம் தரப்பில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களான ஆர்பி உதயகுமார், கேபி முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இப்படியான சூழலில் கேபி முனுசாமி முதல்வர் விஜய்யை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது நடைபெற்று வரும் சில சம்பவங்கள் ஒட்டுமொத்த அதிமுக கட்சியை சேர்ந்தவர்களையும் மன வேதனைக்கு ஆளாக்கி இருக்கிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles