தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது டிரெண்டில் உள்ள இரு முக்கிய நடிகர்கள் என்றால் அது இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் தான். இவர்களுக்குள் எந்த பிரச்சினை இல்லை என்றாலும் இவர் ரசிகர்களுக்கும் சண்டை இருந்துதான் வருகிறது. இருப்பினும் ஒருவருக்குஒருவர் அவ்வப்போது நட்பும் பாராட்டி வருவர்.
இந்நிலையில் கோலிவுட்டின் உச்ச நட்சத்திர பட்டியலில் இருக்கும் இருவரும் தங்களது பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் தங்களது பிறந்தநாட்களை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் பிறந்தநாள் வெளியானது அதற்கு அஜித் சார்பாக அஜித் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் காரணமாக ரசிகர்களும் எந்தவித கொண்டாட்டத்தையும் மேற்கொள்ளவில்லை .
அதுபோலவே தற்போது விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ஆம் தேதி வர உள்ளது. ஒவ்வொரு வருடமும் தளபதியின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடும் ரசிகர்களுக்கு தளபதி விஜயின் சார்பாக இந்த வருடம் எந்தக் கொண்டாட்டமும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது சார்பாக ரசிகர் மன்ற தலைவர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் செலுத்தும் அன்பு மட்டும் போதும் இந்த வருடம் எந்த கொண்டாட்டமும் தேவை இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி காரணமாக தல அஜித்தை ஃபாலோ பண்ணும் விஜய் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.