தமிழ் சினிமாவில் சில ஹீரோக்களின் வெற்றிகள் ஏற்றத்தாழ்வை சந்தித்தபடியே இருக்கும். அந்த மாதிரி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் நீண்ட வருடங்களாக சினிமாவில் இருந்தும் இவருக்கு தொடர்ச்சியான வெற்றி படங்கள் அமையவில்லை.
வெண்ணிலா கபடி குழு மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். அதற்கு அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து திருமணம் செய்து , அவருக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தன் காதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டு விளையாட்டு வீராங்கனை ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் கட்டாகுஸ்தி. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது. தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால்சலாம் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால்.
இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த மூன்று நடிகர்கள் அடுத்தடுத்துஇறந்துள்ளனர். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், சூரி, அப்புகுட்டி, நித்திஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர், இதில் சென்ற ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நித்திஷ் வீரா உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து உடல்நலக்குறைவால் ஹரி பைரவன், தொடர்ந்து இதே படத்தில் நடித்த மாயி சுந்தரம் உயிர் இழந்துள்ளார். 50 வயதான மாயி சுந்தர் மஞ்சள் காமாலை நோயால் இறந்துள்ளார். ஒரே படத்தில் நடித்த சக நடிகர்கள் அடுத்தடுத்து இறந்துள்ளது விஷ்ணு விஷாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.