தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இன்று வரலட்சுமி சரத்குமார் தனது 38 வது பிறந்தநாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். இவரின் செயலை கண்டு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் பல்வேறு தொண்டு மற்றும் சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் சைல்டு ஹெல்த் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்து தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு “ஜாய் ஆப் ஷேரிங்” என்ற நிகழ்வை சேவ் சக்தி அறக்கட்டளை மற்றும் Sankalp Beautiful World ஏற்பாடு செய்துள்ளது. தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் டாக்டர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், புற்று நோய்கள் பலரை பாதுகாக்கவும், இதயத்தை தொடும் பணியை செய்து வரும் மருத்துவர்களுடன் எனது பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் நமக்கு நெருங்கியவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் மட்டுமே அதை பற்றி சிந்திக்கிறோம். மேலும் நம்மால் இயன்ற அளவில் குறைந்தபட்சம் பத்து ரூபாய் கொடுப்பது கூட பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
சமீபத்தில் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் இருந்து கொல்கத்தா வரை 1746 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு முடித்தவர்களை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பல நோயாளிகளை புற்றுநோயிலிருந்து காப்பாற்றி வரும் சங்கல்ப் மற்றும் மருத்துவர்கள் என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளனர்.
அதோடு பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு தங்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
அதோடு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு செய்தியை அதிகம் பகிர வேண்டும் என பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி புற்று நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்.